சோச்சி: ரஷ்யாவில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக நெய்மார் தலை மையிலான பிரேசில் அணி நேற்று முன்தினம் ரஷ்யா வந்தடைந்தது. ஆஸ்திரியாவின் தலைநகர மான வியன்னாவில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் பிரேசில் அணி ஆஸ்திரியாவை 3=0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நட்சத்திர வீரரும் அணியின் தலைவருமான நெய் மார், ஆஸ்திரியா அணிக்கு எதிரா ன ஆட்டத்தில் கோல் போட்டு அசத்தியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக விளை யாடிய நெய்மார், பிரேசிலின் இரண்டாவது கோலை போட்டார். அனைத்துலகப் போட்டியில் நெய்மார் போட்ட 55வது கோலாக இது அமைந்தது. இதன் மூலம் முன்னாள் வீரரான ரொமாரியோவின் சாத னையை அவர் சமன் செய்தார். கடந்த 1987-2005ஆம் ஆண்டு வரை பிரேசில் அணிக்காக விளையாடிய ரொமாரியோ 55 கோல்கள் போட்டிருந்தார். இந்த வகை சாதனையில் பேலே 77 கோல்களும், ரொனால்டோ 62 கோல்களும் போட்டு முதல் இரு இடங்களில் உள்ளனர்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை முன்னிட்டு பிரேசில் அணி ரஷ்யாவின் சோச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வந்து இறங்கியது. விமானத்திலிருந்து இறங்கி வருபவர்களில் அணியின் தலைவர் நெய்மார் (இடது), பயிற்றுவிப்பாளர் டிட்டே (வலது). படம்: ஏஎஃப்பி