மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யா அதற்கான பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பல திட்டங்களை ரஷ்யா நடைமுறைப்படுத்தி உள்ளது. நாளை தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிக்காக ரஷ்ய நகரம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மட்டும் 3,500 தொண்டூழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யா முழுவதிலும் 15,000க்கும் மேற்பட்ட தொண்டூ ழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போட்டிக்காக ரஷ்யா வந்த டையும் சுற்றுப்பயணிகளுக்கு வழிகாட்ட தொண்டூழியர்கள் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா தளங்கள் ஆகியவற்றில் நிறுத் தப்படுவர். அதுமட்டுமல்லாது, ஆட்டங் களின்போது விளையாட்டரங் கங்களில் கூடியிருக்கும் ரசிகர் களுக்கு உற்சாகமூட்டவும் தொண்டூழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி