கோஸ்டா ரிக்காவை பிழிந்தெடுத்த பெல்ஜியம்

பிரசல்ஸ்: நாளை தொடங்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு முன்னதாக அதற் காகத் தயார் செய்யும் வகையில் பல நட்புமுறை ஆட்டங்கள் விளை யாடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கோஸ்டா ரிக்காவை எதிர்த்து பெல்ஜியம் களமிறங்கியது. இந்த ஆட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நேற்று நடை பெற்றது. இதில் 4-1 எனும் கோல் கணக்கில் பெல்ஜியம் வாகை சூடியது. பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ரொமேலு லுக்காகு இரண்டு கோல்களைப் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து பெல்ஜியம் தாக்குதலில் மும்முரம் காட்டியது. இருப்பினும், கோல் முயற்சிகள் கோல்களாக மாற வில்லை. இந்நிலையில், யாரும் எதிர் பார்க்காத வகையில் ஆட்டத்தின் முதல் கோலை கோஸ்டா ரிக்கா போட்டது. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கோஸ்டா ரிக்கா அணித் தலைவர் ரூவிஸ் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. கோல் போட்ட மகிழ்ச்சியில் கோஸ்டா ரிக்கா கொண்டாடிய போதிலும் பெல்ஜியம் துவண்டு விடவில்லை.

பந்தை வலைக்குள் புகுத்த முயலும் பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ரொமேலு லுக்காகு (இடது). அதைத் தடுக்க பாய்கிறார் கோஸ்டா ரிக்காவின் கோல்காப்பாளர் கேலோர் நவாஸ். பெல்ஜியத்தின் அபார வெற்றிக்கு லுக்காகு முக்கிய காரணமாக இருந்தார். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகளுக்கு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!