சோச்சி: நடப்பு யூரோ கிண்ண வெற்றியாளரான போர்ச்சுகலும் முன்னாள் உலகக் கிண்ண வெற் றியாளரான ஸ்பெயினும் இன்றிரவு மோதும் ஆட்டத்தைக் காண உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் கண்விழித்துக் காத்திருப்பர் என்பது நிச்சயம். உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நேற்று தொடங்கின. அதற்கு ஒருநாள் முன்னதாக ஸ்பெயின் அணியின் பயிற்றுவிப் பாளராக இருந்த யூலன் லொபெட் டிகையை ஸ்பானிய காற்பந்துக் கூட்டமைப்பு பதவிநீக்கம் செய்து அதிர்ச்சியளித்தது.
கூட்டமைப்பிடம் தெரிவிக் காமல் ரியால் மட்ரிட் குழுவின் நிர்வாகியாக பொறுப்பேற்க அவர் சம்மதித்ததே இதற்குக் காரணம். உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஸ்பெயின் இருந்துவரும் நிலையில், லொபெட்டிகையின் பதவிநீக்கம் அவ்வணிக்குப் பின் னடைவை ஏற்படுத்தும் என்பது காற்பந்து விமர்சகர்கள் சிலரின் கருத்து. இவ்வேளையில், லொபெட்டிகை யின் இடத்தில் பயிற்றுவிப்பில் அதிக முன்அனுபவம் இல்லாத ஸ்பெயின் அணியின் முன்னாள் தலைவரான ஃபெர்னாண்டோ ஹியரோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் ஆட்டக்காரர் செர்ஜியோ ராமோசும் (இடது) போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ரியால் மட்ரிட் குழுவிற்காக விளையாடி வரும் நிலையில் இருவரும் இன்று ஒருவரை ஒருவர் எதிர்த்தாடுவதைக் காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி