ரஷ்ய கோல் மழையில் நிலைகுலைந்த சவூதி

மாஸ்கோ: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கோல் மழையுடன் தொடங்கி உள்ளது. போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யா நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 5=0 எனும் கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தியது. கோலாகலமாக நடைபெற்ற தொடக்க விழாவுக்குப் பிறகு போட்டியின் முதல் ஆட்டம் தொடங்கியது. ஆரம்பத்தில் வேகம் காட்டிய சவூதி, நேரம் ஆக ஆக ரஷ்யாவின் பிடியில் சிக்கியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார் ரஷ்யாவின் யூரி கசின்ஸ்கி.

கொண்டாட்டம் தணிந்த சிறிது நேரத்தில் ரஷ்யாவின் மத்தியதிடல் ஆட்டக்காரர் ஆலன் ஸாகோயேவ் காயமுற்று ஆட்டத் திலிருந்து வெளியேறினார். ரஷ்யாவுக்கு இது ஒரு பின்னடைவு இல்லை, மறை முகமாகக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று அடுத்த சிறிது நேரத்தில் தெரிய வந்தது. இடைவேளைக்கு ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள் இருந்தபோது ஸாகோயேவுக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய டெனிஸ் சேரிஷேவ் கோல் போட்டார்.

சவூதி தற்காப்பு ஆட்டக் காரர்களைக் கடந்து சென்ற செரிஷேவ் பந்தை வலைக்குள் அனுப்பினார். இடைவேளையின்போது ரஷ்யா 2=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்தில் சவூதி அரேபியா தலைதூக்காதபடி ரஷ்யா தொடர்ந்து ஆதிக்கம் செலுத் தியது. இந்நிலையில், ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் ரஷ்யாவுக்கு மாற்று ஆட்டக்காரராகக் களமிறங் கினார் ஸ`பா. வந்த வேகத்திலியே அடுத்த சில வினாடிகளில் அவர் ரஷ்யாவின் மூன்றாவது கோலைப் போட்டு சவூதி ஆட்டக்காரர்களை தடுமாற வைத்தார்.

சவூதி அரேபிய தற்காப்பு ஆட்டக்காரர்களைக் கடந்து சென்று பந்தை வலைக்குள் அனுப்பி ரஷ்யாவின் இரண்டாவது கோலைப் போடும் டெனிஸ் செரிஷேவ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!