இருபது ஆண்டுகளுக்குப் பின் முதல் வெற்றியை ஈட்டிய ஈரான்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக் கிண்ணப் போட்டிகளில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஈரான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான், நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் மொரோக்கோ வீரர் அஸிஸ் பொஹடோஸ் 95வது நிமிடத்தில் அடித்த சொந்த கோலால் 1-0 என்ற கோல் கணக் கில் வெற்றியை ருசித்தது. ஒட்டு மொத்தத்தில், உலகக் கிண்ணப் போட்டிகளில் அக்குழு பெற்ற இரண்டாவது வெற்றி இதுதான். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் தாங்கள் எதிரணியின் வலையை நோக்கி ஒருமுறைகூட பந்தை உதைக்காதபோதும் எதிர் பாராது கிட்டிய வெற்றியால் அவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக் காடிப் போயினர்.

ஆட்டம் முடிந்த தும் பல நிமிடங்கள் திடலிலேயே இருந்த அவர்கள், ஏதோ உலகக் கிண்ணத்தையே வென்றுவிட்டது போல கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக, பயிற்றுவிப்பாளர் கார் லோஸ் குயிரோசைத் தூக்கிப் போட்டுப் பிடித்து மகிழ்ந்ததைக் கண்டு, அவர்கள் ஏதோ அதிச யத்தை நிகழ்த்திக் காட்டியதுபோல நினைக்கச் செய்யும்படி இருந்தது. மாறாக, 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிட்டாமல் போன சோகத்தில் இருக்கும் மொரோக்கோ நாட்டினருக்கு, இந்தத் தோல்வி ஒரே வாரத்தில் கிடைத்த இரண்டாவது ஏமாற்ற மாக அமைந்தது.

ஆட்டத்தின் கடைசித் தருணத்தில் சொந்த கோலடித்து அணியைத் தோல்வியுறச் செய்துவிட்டோமே என்ற சோகம் தாங்காமல் கண்ணீர் உகுக்கும் மொரோக்கோ ஆட்டக்காரர் அஸிஸ் பௌஹடோஸை (நடுவில்) தேற்றும் சக வீரர்கள். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகளுக்கு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!