ரொனால்டோ அதிரடி

சோச்சி: இப்போதைக்கு உலகின் சிறந்த காற்பந்து வீரர் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் போர்ச்சுகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் தமது அணி யைத் தோல்வியின் பிடியிலிருந்து மீட்டதோடு, 'ஹாட்ரிக்' கோலடித்து ஆட்டத்தை 3=3 என்ற கோல் கணக்கில் சமன் காணச் செய்து ஆட்ட நாயகனாக மிளிர்ந்தார். ஆட்டத்தின் நான்காவது நிமி டத்திலேயே பெனால்டி மூலம் கோல் அடித்து அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார் ரொனால்டோ. அதன்பின் 24ஆம் நிமிடத்தில் ஸ்பெயின் தாக்குதல் ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டா போர்ச்சுகல் வீரர்களின் தற்காப்பைத் தகர்த்து அடித்த அருமையான கோலால் ஆட்டம் 1-1 எனச் சமனுக்கு வந்தது.

முற்பாதி ஆட்டம் முடிய இரு நிமிடங்களே இருந்த நிலையில் ரொனால்டோ வலையை நோக்கி வேகமாக உதைத்த பந்தை மிக எளிதாகத் தடுத்திருக்க முடியும் என்றாலும் ஸ்பெயின் கோல்காப்பா ளர் டாவிட் ட கியா கோட்டைவிட் டார். இதனால் 2-1 என்ற முன்னி லையுடன் போர்ச்சுகல் இடை வேளைக்குச் சென்றது. பிற்பாதியில் ஸ்பெயின் வீரர்கள் துடிப்புடன் விளையாடினர். 55வது நிமிடத்தில் கோஸ்டாவும் 58வது நிமிடத்தில் நாச்சோவும் ஆளுக் கொரு கோலடிக்க, ஸ்பெயின் முன்னிலைக்குச் சென்றது.

போர்ச்சுகல் வீரர்கள் மூவரின் தற்காப்பை முறியடித்து ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ஸ்பெயினின் முதல் கோலை அடித்து ஆட்டத்தை 1-1 எனச் சமனுக்குக் கொண்டு வந்த டியேகோ கோஸ்டா (இடது), பிற்பாதியில் தன் பங்கிற்கு இன்னொரு கோலையும் போட்டார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!