சோச்சி: ரஷ்ய நகரான சோச்சியில் இன்று 'ஜி' பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம், பனாமா அணிகள் மோதுகின்றன. இவ்விரண்டு அணி களும் மோதும் முதல் உலகக் கிண்ணப் போட்டி என்பதால் இரு அணிகளின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த ஒன்பது உலகக் கிண்ணத் தொடக்க ஆட்டங்களில் வாகைசூடிய பெல்ஜியத்துடன் இறுதி தகுதிச்சுற்றின் பத்துப் போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்ற பனாமா மோதுகிறது.
ரோபர்டோ மார்டினெஸ் பெல் ஜியம் நாட்டவர் அல்லாத முதல் பெல்ஜியம் பயிற்றுநர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது உலகக் கிண்ண ஆட்டத்தைச் சந்திக்கும் பனாமா நிர்வாகி ஹெர்னன் டேரியோ கோமெஸ் மூன்று முறையும் மூன்று வெவ் வேறு அணிகளுக்காக வேலை செய்தவர். கடந்த 1998ஆம் ஆண்டு கொலம்பியா அணியிலும் 2002ஆம் ஆண்டு இகுவடார் அணியிலும் இவர் இடம்பெற்றார்.
இன்றைய ஆட்டத்தில் பனாமாவை வீழ்த்தும் முனைப்புடன் பயிற்சியில் ஈடுபடும் பெல்ஜியம் ஆட்டக்காரர் கள். படம்: ராய்ட்டர்ஸ்