மாஸ்கோ: உலக அரங்கில் பெரி தாக சாதிக்காத பெருவும் டென் மார்க்கும் 'சி' பிரிவின் இரண் டாவது ஆட்டத்தில் சந்தித்தன. இரு அணிகளும் பலமாக மோ தி க் கொ ண் ட போ தி லு ம் வெற்றி டென்மார்க்கிற்குச் சென் றது. கிட்டத்தட்ட 36 ஆண்டு களுக்குப் பிறகு உலகக் கிண்ண ஆட்டத்தில் பங்கேற்ற பெரு கோல் எதுவும் போடாமல் தோல் வியைத் தழுவியது. கடைசியாக 1982 உலகக் கிண்ணப் போட்டி யில் பங்கேற்ற பெரு, தொடக்கச் சுற்றிலேயே வெளியேறியது. அதன் பிறகு உலகக் கிண்ண ஆட்டத்தின் பக்கமே அது திரும்பிப் பார்க்கவில்லை. இருப்பினும் பெரு அணியின் தலைவர் பாவ்லோ குரேரோவுக்கு இது மறக்கமுடியாத ஆட்டமாகும். உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது ஊக்கமருந்து உட்கொண்டதாக இவருக்குத் தடை விதிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தடை விலகி உலகக் கிண்ணப் போட்டி யில் குரேரோ பங்கேற்றார்.
டென்மார்க்கின் ஒரே கோலைப் போட்ட யூசுஃப் போல்சன். படம்: ஏஎஃப்பி