பிரேசில் அதிர்ச்சி தொடக்கம்

ஒரு நொடி, ஒரு தருணம் போதும் ஓர் ஆட்டத்தின், ஒரு போட்டித் தொடரின் போக்கையே நிர்ணயிக் கக்கூடும். அந்த தன்மையே காற்பந்தின், குறிப்பாக அனைத் துலகக் காற்பந்துப் போட்டிகளின் மிகச் சிறப்பான அதே சமயம் மிகவும் கொடுமையான ஓர் அம்சம். அப்படி ஒரு தருணத்தை காற்பந்து உலகின் ஜாம்பவான் களில் ஒன்றான பிரேசில் நேற்று அனுபவித்தது. பிரேசிலுடன் பொருதிய சுவிட் சர்லாந்து அணி அப்படி ஒரு தருணத்தில்தான் தனது கோலைப் புகுத்தி பிரேசிலுடன் 1=1 என்ற கோல் கணக்கில் சமைநிலை கண்டது. தொடக்கம் முதலே தாக்குதல் களை மேற்கொண்டது பிரேசில் அணி. பிரேசிலின் ஃபிலிப்பே கொட்டின்யோ ஆட்டத்தின் முதல் பாதியில் பெனால்டி எல்லைக்கு வெளியே இருந்து அருமையாக உதைத்த பந்து, வளைந்து, நெளிந்து சுவிட்ஸர்லாந்தின் கோல்காப்பாளரின் கைகளையும் கடந்து சென்று வலையை முத்த மிட்டது.

ஆட்டத்தின் பிற்பாதியில், 50ஆவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை கோலாக்கினார் சுவிட்சர்லாந்தின் ஆட்டக்காரர் ஸ்டீவன் ஸுபர். அதன் பின்னர் பிரேசிலால் சுவிட்சர்லாந்தின் தற்காப்பைத் தகர்க்க முடியவில்லை. ஆட்டம் 1-1 என்று முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!