போலந்து, செனகல் இரு குழுக்களுமே நீண்ட இடை வெளிக்குப் பிறகு உலகக் கிண்ண மேடைக்குத் திரும்பு கின்றன. இரு அணிகளுமே முதன்முறையாக இப்போட்டியில் மோதுகின்றன. போலந்து கடைசியாக 2006ஆம் ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியுள்ளது. போலந்துக்கு உலகின் தலைசிறந்த கோல் மன்னர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ராப்ர்ட் லிவாண் டோஸ்கி பலம் சேர்ப்பார். அவரே போலந்தின் அணித் தலைவர். ஒரு நாட்டினுடைய முழு நம்பிக்கையையும் ஒரே ஆளாகத் தனது தோளில் அவர் சுமந்து வந்துள்ளார்.
மறுபக்கம் 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் முதன் முறையாக விளை யாடிய ஆப்பிரிக்க நாடான செனகல் அப்போது கால் இறுதிச்சுற்று வரைக்கும் சென் றது. அதன் பின்னர் இப்போதுதா ன் உலக மேடைக்குத் திரும்புகி றது. செனகலின் முக்கிய நட்சத் திரமாகத் திகழ்பவர் லிவர்பூல் குழுவில் இடம்பெற்றுள்ள சாடியோ மானே. அவரது வேகமும் உத்வேகமும் எந்த எதிரணிக்கும் பதற்றத்தைக் கொடுக்கவல்லது. எனினும், 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ண அணியில் இடம்பெற்ற சிசே தற்போதைய அணியின் பயிற்றுவிப்பாளர். தற்காப்பில் கவனம் செலுத்தும் அவரது உத்திகள் விமர் சனத்துக்கு உள்ளாகியிருந்தாலும் அதே உத்திகள்தான் செனகலை உலகக் கிண்ணத்துக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.