ஜெர்மனியின் தோல்வி ஒரு பாடம்: எச்சரிக்கையுடன் அணுகும் ஸ்பெயின்

கஸன்: போட்டிகள் தொடங்க இரு நாட்களே இருந்த நிலையில் பயிற்றுவிப்பாளர் அதிரடியாக நீக்கப்பட்டபோதும் போர்ச்சுகலுக்கு எதிரான சவால்மிக்க தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின ரின் ஆட்டம் மெச்சும்படியாகவே இருந்தது. அந்த ஆட்டத்தை வெல்லமுடி யாவிடினும் சமநிலையில் முடிந்து ஒரு புள்ளியைக் கைப்பற்றியதால் ஸ்பெயின் மீதான நெருக்கடி சற்றே குறைந்தது. அதே நேரத்தில், ஈரானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வென்று, தனது நிலையை வலுப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஸ்பெயின் உள்ளது. ஈரானுடன் ஸ்பெயின் மோதுவது இதுவே முதல் முறை. ஆட்டக் காரர்களின் திறமையை வைத்துப் பார்க்கையில், ஈரானை ஸ்பெயின் எளிதில் வீழ்த்தக்கூடும்.

ஆயினும், கிண்ணத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக் கும் ஜெர்மனி, மெக்சிகோவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள தாகக் கருதப்படும் வேறு சில அணிகளுக்கு எச்சரிக்கை விடுப் பதாக அமைந்தது. அதை ஸ்பெயி னும் நன்கு உணர்ந்திருக்கிறது. "ஜெர்மனிக்கு நடந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக் கலாம்," என்கிறார் ஸ்பெயினின் புதிய பயிற்றுவிப்பாளரான ஃபெர்னாண்டோ ஹியரோ. "32 அணிகளுமே திறமையான அணிகள்தான். முதல் ஆட்டம் எல்லா அணிகளுக்கும் சிரமமான ஒன்றுதான். பதற்றமின்றி விளை யாட வேண்டியது அவசியம்," என்று ஹியரோ சொன்னார்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!