முதல் ஆட்டத்திலேயே முத்திரை

வோல்கோகிராட்: அணித் தலைவர் ஹேரி கேன் இரு கோல்களை அடிக்க, துனீசியாவிற்கு எதிரான 'ஜி பிரிவு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, உலகக் கிண்ணக் காற்பந்துப் பயணத்தை இங்கிலாந்து அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஆட்டம் 90 நிமிடங்களைத் தாண்டியும் 1-1 எனச் சமநிலையில் இருந்ததால் இந்த உலகக் கிண்ணத் தொடரும் இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றமாக அமையலாம் எனக் கருதப்பட்டது. இந்த நிலை யில், இடைநிறுத்தத்திற்காக இறுதி யில் சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத் தின் முதல் நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்து, ஆட்டத்தின் முடிவை மாற்றினார் ஹேரி கேன். "இங்கிலாந்து ஆட்டக்காரர் களை நினைத்துப் பெருமைப்படு கிறேன். போட்டி கடினமானதாகவே இருந்தது. முற்பாதியில் சிறப்பாக ஆடிய நாங்கள் இன்னும் சில கோல்களை அடித்திருந்திருக்க முடியும்," என்றார் அவர்.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் இங்கிலாந்து தற்காப்பு ஆட்டக் காரர் தலையால் முட்டி வலையை நோக்கி அனுப்பிய பந்தைத் தட்டி விட்டார் துனீசியா கோல்காப்பாளர் மோயெஸ் ஹசன். ஆயினும், அவ ருக்கு அருகிலேயே நின்றிருந்த கேன், பந்தை மீண்டும் வலைக்குள் தள்ளிவிட்டு இங்கிலாந்தை முன் னிலை பெறச் செய்தார்.

2006க்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணி இரண்டு கோல்களை அடித்திருப்பது இதுவே முதன்முறை. கடைசி நேரத்தில் கோலடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்த ஹேரி கேனை (வலது) மொய்த்து வாழ்த்தும் சக இங்கிலாந்து ஆட்டக்காரர்கள். படங்கள்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!