ஜோசஃப் ஸ்கூலிங் வென்றார்; சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி களில் ஆண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங் தங்கம் வென்று தமது சாதனையைத் தக்கவைத்துள்ளார். ஜகார்த்தாவின் ஜிலோரா பங் கார்னோ அக்குவேட்டிக் மையத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜோசஃப் ஸ்கூலிங் 51.04 விநாடிகளில் நீந்தி முதல் இடத்தைப் பெற்றார். அவருக்கு அடுத்த நிலை யில் சீனாவின் லி ஸுஹாவ் வந்தார். அவர் நீந்திய நேரம் 51.46 விநாடிகள். ஜப்பானின் யுகி கொபோரி 51.77 விநாடிகள் நீந்தி வெண்கலத்தை வென் றார்.

சிங்கப்பூரின் மற்றொரு நீச்சல் வீரர் குவா ஸெங் வென் 52.54 விநாடிகள் எடுத்துக் கொண்டதன் மூலம் நான் காவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இப்போது நடைபெறும் ஆசிய விளை யாட்டுப் போட்டிகளில் சிங்கப் பூருக்கு முதல் தங்கம் கிடைத் துள்ளது. நேற்றுக் காலை நடைபெற்ற தகுதிச் சுற்றிலும் ஸ்கூலிங் முதலாவதாக வந்தார். இன்று நடைபெற இருக்கும் 50 மீட்டர் நீச்சல் போட்டியிலும் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற இன்சியோன் ஆசி யாட் போட்டியிலும் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்ச லில் ஸ்கூலிங், 23, தங்கம் வென்றார். அவர் எடுத்துக் கொண்ட 51.76 விநாடிகள் அப்போது சாதனையாக அமைந் தது. அந்தப் போட்டியில் அவர் வென்றதன் மூலம் ஆண்கள் தனிநபர் நீச்சலில் சிங்கப்பூரின் 32 ஆண்டு கனவு நிறைவே றிய து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!