புதுடெல்லி: இங்கிலாந்து அணிக் கெதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி யில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த தொடக்க பந்தடிப்பாளரான முரளி விஜய், 34, நீக்கப்பட்டுள்ளார். பர்மிங்ஹமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன் னிங்ஸ்களில் முறையே 20 மற்றும் 6 ஓட்டங்களை எடுத்த விஜய், லார்ட்சில் நடந்த இரண்டாவது போட்டியின் இரு இன்னிங்ஸ் களிலும் ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து, நாட்டிங்ஹமில் நடந்த மூன்றாவது போட்டியில் அவர் களமிறக்கப் படவில்லை.
இந்நிலையில், கடைசி இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முரளி விஜய், இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டு மும்பையைச் சேர்ந்த 18 வயது இளம் வீரர் பிருத்வி ஷா, ஆந்திர அணிக்காக விளையாடி வரும் 24 வயது ஹனுமா விகாரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.