ஜகார்த்தா: சிங்கப்பூரின் நீச்சல் நட்சத் திரம் ஜோசஃப் ஸ்கூலிங் (படம்) இந்தோ னீசியாவில் நடந்து வரும் ஆசிய விளை யாட்டுப் போட்டிகளில் இரண்டாவது தங்கத்தைக் கைப்பற்றினார். நேற்று நடந்த 50 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் 23.61 வினாடிகளில் முதலாவதாக வந்தார் ஸ்கூலிங். காலை யில் நடந்த தகுதிச்சுற்றில் இவர் பந்தய தூரத்தை 23.84 வினாடிகளில் கடந்தார். சீனாவின் வாங் பெங், கஸக்ஸ்தானின் அடில்பெக் முசின் ஆகியோர் முறையே வெள்ளியையும் வெண்கலத்தையும் வென்றனர்.
முன்னதாக, 4x200 மீ., 4x100 மீ. எதேச்சை பாணி அஞ்சல் நீச்சலில் சிங்கப்பூர்க் குழுவுடன் இணைந்து ஸ்கூலிங் வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இன்று நடக்கவுள்ள 4x100 மீ. கலப்பு பாணி நீச்சலில் ஸ்கூலிங் கலந்துகொள்கிறார். இதற்கிடையே, பெண்களுக்கான 50 மீ. நெஞ்சு நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் ரோவன் ஹோ 31.23 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தைத் தனதாக்கினார். ஜப்பான் வீராங்கனை சடோமி தங்கத்தையும் சீனாவின் ஃபெங் வெண்கலமும் வென்றனர்.