கபடி: இந்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி

ஜகார்த்தா: கபடி விளையாட்டில் இதுநாள் வரை வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்து வந்த இந்தியா, நேற்றுடன் அந்தப் பெரு மையை இழந்தது. கபடி ஆட்டம் 1990ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப் பட்டது முதல் தொடர்ந்து ஏழு முறை தங்கம் வென்று சாதித்த இந்திய ஆடவர் குழு, இம்முறை இறுதிப் போட்டிக்கே முன்னேற முடியாமல் தலைக்குனிவைத் தேடிக்கொண்டது. தகுதிச் சுற்றில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய ஆடவர் குழு, பங்ளாதேஷ், இலங்கை, தாய்லாந்து குழுக்களைப் புரட்டி எடுத்தது. இருப்பினும், தென் கொரியாவிடம் 24=23 எனத் தோற்றதால் 'ஏ' பிரிவில் இரண்டா மிடத்தைப் பிடிக்க நேரிட்டது.

இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த அரையிறுதிப் போட் டியில் ஈரானுடன் இந்தியா மோதி யது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, மெல்ல மெல்ல பிடியை நழுவவிட்டது. ஒரு கட்டத்தில் 6=4 என முன்னிலையில் இருந்த இந்தியா வால் ஈரான் வீரர்களை முழுமை யாக வெளியேற்ற முடியவில்லை. பின் ஈரான் வீரர்கள் எழுச்சி பெற, இடைவேளையின்போது ஆட்டம் 9=9 எனச் சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் முழுக்க முழுக்க ஈரானின் கையே மேலோங்கி இருந்தது. இறுதியில், ஈரான் 27=18 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால், இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது. அதேபோல, இன்னோர் அரை இறுதியில் தென்கொரியாவிடம் தோற்ற பாகிஸ்தானுக்கும் வெண் கலமே கிட்டியது.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையரின் பிடியிலிருந்து நழுவி எல்லைக்கோட்டைத் தொட முயலும் ஈரானின் காலஜ் கஸல் (சிவப்புச் சீருடை). படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!