ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆறாம் நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிட்டின. டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா = திவிஜ் சரண் இணை 6=3, 6=4 என்ற செட் களில் கஸக்ஸ்தானின் அலெக் சாண்டர் பப்லிக் = டெனிஸ் யெவ்செயெவ் இணையைத் தோற் கடித்து, தங்கத்தைக் கைப்பற் றியது. இதனுடன் சேர்த்து, தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
கடந்த முறை யூகி பாம்ப்ரியுடன் சேர்ந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந் தார் திவிஜ் சரண். ஆசிய விளையாட்டுப் போட்டி களில் போபண்ணா பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறை. படகு வலித்தலிலும் நேற்றைய நாள் இந்தியாவுக்குச் சிறப்பான நாளாக அமைந்தது. ஆடவருக்கான 'ஸ்கல்' குழுப் பிரிவில் இந்தியாவின் சவர்ன் சிங், டட்டு போக்கனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் அடங்கிய குழு தங்கப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான ஒற்றையர் 'லைட்வெய்ட் ஸ்கல்' பிரிவில் துஷ்யந்த் வெண்கலம் வென்றார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் துஷ்யந்த் இதே பிரிவில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இரட்டையர் பிரிவில் ரோகித் குமார் - பகவான் சிங் இணை வெண்கலத்தைக் கைப்பற்றியது.