ஜகார்த்தா: ஆடவருக்கான 4x100 மீட்டர் கலப்பு பாணி அஞ்சல் நீச்சலில் சிங்கப்பூர்க் குழு நான்காமிடத்தைப் பிடித்த தால் பதக்கம் கைநழுவியது. நேற்றுக் காலையில் நடந்த தகுதிச் சுற்றில் குவா ஸெங் வென், ஜோசஃப் ஸ்கூலிங், லயனல் கூ, டேரன் சுவா ஆகி யோர் அடங்கிய சிங்கப்பூர்க் குழு மூன்று நிமிடம் 39.69 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து நான்காமிடத்துடன் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதனால் வெண்கலப் பதக் கத்தையேனும் அவர்கள் போராடி வெல்வர் என எதிர்பார்க்கப் பட்டது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் விளையாட் டில் கடைசி பந்தயமாக நேற்றிரவு 4x100 மீ. கலப்பு பாணி அஞ்சல் நீச்சலின் இறுதிப் போட்டி நடை பெற்றது. இதில் தொடக்கத்திலிருந்து 300 மீ. வரை ஜப்பான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியபோதும் கடைசி 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் வேகம் காட்டிய சீனா தங்கப் பதக்கத்தைத் தன தாக்கியது. சீன வீரர்கள் மூன்று நிமிடம் 29.99 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்ததோடு முந்தைய சாதனையையும் முறி யடித்தனர்.
அவர்களைவிட 0.04 வினாடி பின்தங்கிய ஜப்பான் வெள்ளிப் பதக்கத்தையும் 5.63 வினாடிகள் பின்தங்கிய கஸக்ஸ்தான் வெண் கலப் பதக்கத்தையும் வென்றன. இப்போதைக்கு சிங்கப்பூர் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஆறு வெண்கலம் என மொத்தம் ஒன்பது பதக்கங்களுடன் பட்டி யலில் பதினைந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.