செல்சி=நியூகாசல் மோதல்: ஈடன் ஹசார்டுக்கு இடம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நியூ காசல் யுனைடெட் குழுவுடன் இன்றிரவு பொருதவுள்ள செல்சி அணியில் ஈடன் ஹசார்ட் இடம் பெறுவார் என்று அதன் நிர்வாகி மௌரிசியோ சாரி கூறியுள்ளார். அப்படி நடந்தால், பெல்ஜிய ஆட்டக்காரரான ஹசார்ட் இப்பரு வத்தில் செல்சிக்காக களமிறங் குவது இதுவே முதன்முறையாக இருக்கும். அண்மையில் ரஷ்யாவில் நடை பெற்ற உலகக் கிண்ணப் போட்டி யில் அரையிறுதி வரை சென்ற பெல்ஜிய அணியின் தலைவராக செயல்பட்டார் ஹசார்ட். தாக்குதல் ஆட்டக்காரரான அவர் தொடர்ந்து செல்சிக்காக விளையாடுவார் என்று சாரி நம்பிக்கை தெரிவித்தார்.

"தலைசிறந்த செல்சி குழு விற்கு நான் நிர்வாகியாக உள் ளேன். இக்குழுவின் மிக முக்கிய ஆட்டக்காரராக ஹசார்ட் திகழ் கிறார். அவருக்கு ஈடான இன் னோர் ஆட்டக்காரர் கிடைக்காத வரை அவரை வேறு குழுவிற்கு விற்கமாட்டோம். எனவே இப்பரு வம் முழுவதும் ஹசார்ட் செல்சி யில் நீடிப்பார்," என்றார் சாரி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!