‘தொழில்நுட்பத் துறைகளில் அதிக பெண்கள் சேரவேண்டும்’

நாடு அறிவார்ந்த தேசமாக முன்னேறும் வேளையில் 'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பட்டதாரிக ளின் தேவை அதிகரிக்கிறது என்றும் கூடுதலான பெண்கள் இத்துறைகளில் சேர முன்வர வேண்டும் என்றும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார். நேற்று ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் பெண்கள் பிரிவின் வருடாந்திர மாநாட்டில் அந்தக் கட்சியின் பெண்கள் பிரிவுத் தலைவியான திருவாட்டி ஃபூ இது குறித்துப் பேசினார்.

உற்பத்தியைத் தானியக்க முறையாக்கி வருவதாலும் செயல் முறைகளை மின்னியல் வடிவமாக்கி வருவதாலும் இந்த நான்கு துறைகளும் எதிர்காலத் துக்கு இன்றியமையாதவை என்று திருவாட்டி ஃபூ கூறினார். அறிவியல், கட்டடக்கலைத் துறைகளில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளில் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களைக் காட்டிலும் கூடுதலான பெண்கள் பயின்று வந்தாலும், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் பெண்களின் எண் ணிக்கை குறைவாகவே உள்ளது என்று நேற்றைய மாநாட்டில் பங்கேற்ற சுமார் 400 கட்சி ஆர்வலர்களிடையே திருவாட்டி ஃபூ விவரித்தார்.

பல்கலைக்கழகங்களின் தக வல் தொழில்நுட்பப் பட்டப் படிப்பில் சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை 2007ல் 39 விழுக்காடாக இருந் தது. அது 2016ல் 36 விழுக் காடாகக் குறைந்தது. ஆனால், 2016ஆம் ஆண்டில் பொறியியல் துறையில் சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை 2007ல் இருந்த 28 விழுக்காட்டி லிருந்து 30 விழுக்காடாக சற்றே உயர்ந்தது.

அதிவேகமாக வளர்ந்துவரும் 'ஸ்டெம்' துறைகளில் அதிக வரு வாய் அளிக்கக்கூடிய வேலைகள் இருப்பதால் அவற்றில் கூடுதல் எண்ணிக்கையிலான பெண்கள் பணியில் சேருவதன் மூலம் பலனடையலாம் என்று திருவாட்டி ஃபூ கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!