ஈராக்கின் காலிறுதிக் கனவைத் தகர்த்த கத்தார்

அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற் பந்துத் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில் கத்தார் அணி முன்னாள் வெற்றியாளரான ஈராக்கை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் பஸம் அல் ராவி ‘ஃபிரீ கிக்’ மூலம் அடித்த அற்புதமான கோல் அந்த அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இவரின் தந்தையான ஹிஷாம் 1990களில் ஈராக் தேசிய அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 ஆசியக் கிண்ண வெற்றி யாளரான ஈராக் பல கோல் வாய்ப் புகளை வீணடித்தது. அந்த அணி ஆசியக் கிண்ணப் போட்டிகளில் காலிறுதிக்கு முன்பே வெளியேறி இருப்பது 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே முதன்முறை.
2022ஆம் ஆண்டில் உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தவிருக்கும் கத்தார், காலிறுதி யில் கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாகக் கருதப் படும் வலிமையான தென்கொரி யாவை நாளை எதிர்த்தாடவுள்ளது.
நடப்பு ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை 11 கோல் களை அடித்திருக்கும் கத்தார், எதிரணிகளை ஒரு கோல்கூட அடிக்க விடவில்லை என்பதால் காலிறுதியில் தென்கொரியாவிற்கு கடும் சவால் காத்திருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்