ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியாவுடன் பொருதுகிறது இந்தியா

ஹைதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டியை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ் திரேலியா வென்றது.
அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளன. இதில் முதல் ஒரு நாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. 
விராத்கோஹ்லி தலைமையி லான இந்திய அணியில் ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் டோனி, லோகேஷ், ராகுல், ரி‌ஷப்பண்ட் ஆகிய பந்தடிப்பாளர் உள்ளனர்.
பந்து வீச்சில் பும்ரா, முகமது சமி, சுழற்பந்து வீச்சாளர்கள் குல் தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். 20 ஓவர் தொடரை இழந்ததால் ஒரு நாள் போட்டித் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங்

23 Aug 2019

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கனடா கிரிக்கெட் வீரர்

லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

23 Aug 2019

ஆர்சனலுக்கான சவால்