‘ஃபுல்ஹம்மைக் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்’

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இன்றிரவு ஃபுல்ஹம் குழுவைச் சந்திக்கிறது செல்சி.    தற்போது லீக் பட்டியலில் 19வது இடத்தில் இருக்கும் ஃபுல்ஹம், அடுத்த பருவத்தில் இரண்டாவது நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயத்தைச் சந்திக்கிறது.  அதிலிருந்து தப்பிக்க ஃபுல்ஹம் மிகுந்த முனைப்புடன் விளையாடக்கூடும் என்றும் அதற்கு எதிராக மிகவும் கவனத்துடன் களமிறங்க வேண்டும் என்றும் தமது வீரர்களிடம் தெரிவித்துள்ளார் செல்சியின் நிர்வாகி மொரிசியோ சாரி.
ஃபுல்ஹம் தொடர்ந்து பல தோல்விகளைத் தழுவி வந்ததால் அதன் நிர்வாகி பதவியிலிருந்து கிளோடியோ ரனியேரி கடந்த வியாழக்கிழமையன்று நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஸ்கோட் பார்க்கர் இடைக்கால நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாகி கிடைத்த தெம்பில் ஃபுல்ஹம் வெற்றியை இலக்காகக் கொண்டு விளையாடக்கூடும் என்று சாரி தமது வீரர்களை எச்சரித்துள்ளார்.
“பயிற்றுவிப்பாளர் மாறும்போது குழுவில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். ஃபுல்ஹமுக்குப் புதிய நிர்வாகி கிடைத்திருப்பதால் அவர்களது உத்தியை முன்னுரைப்பது சிரமம். இதன் விளைவாக அவர்களுக்கு எதிராக எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது குறித்து முடிவெடுப்பது எளிதல்ல,” என்றார் சாரி.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி 

19 Jun 2019

ஜப்பான் வீரர்களைத் திணறடித்த சிலி

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

19 Jun 2019

அரை இறுதியை நோக்கி முன்னேறும் பங்ளாதேஷ்