நியூசிலாந்து கிரிக்கெட் அணி சாதனை

ஹேமில்டன்: நியூசிலாந்துக்கும் பங்ளாதே‌ஷுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் முதல் இன்னிங்சில் 234 ஓட்டங்களில் சுருண்டது. அதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
துவக்க வீரர் ராவல் 132 ஓட்டங்களும் லாதம் 161 ஓட்டங்களும் குவித்தனர். 3வது வீரராக களமிறங்கிய அணித் தலைவர் வில்லியம்சனும் ஓட்டங்களைக் குவித்தார். வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 715 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்சை நியூசிலாந்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணி அனைத்துலக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.