கெய்ல் அதிரடியில் சமனானது தொடர்

கிராஸ் ஐலெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற, தொடரும் 2-2 எனச் சமனில் முடிந்தது. நான்காவது ஆட்டத்தில் ஒரே இன்னிங்சில் 24 சிக்சர்களை விளாசி உலக சாதனை படைத்த இங்கிலாந்து, கடைசிப் போட்டியில் ஒரு சிக்சர்கூட அடிக்கவில்லை. அந்த அணி 28.1 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் 12.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்த எளிய எலக்கை எட்டியது. அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் ஒன்பது சிக்சர்களுடன் 
77 ஓட்டங்களை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது