சாம்பியன்ஸ் லீக்: மலைபோலக் காத்திருக்கும் சவால்

பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் ஆடுவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரின்சஸ் பார்க் விளையாட் டரங்கிற்குச் செல்லும் மான்செஸ்டர் யுனைடெட் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மலையைத் தாண்டுவது போலத்தான்.
இரண்டு வாரங்களுக்குமுன் சொந்த ஓல்டு டிராஃபர்ட் அரங் கில் நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் யுனை டெட் குழு 0-=2 என்ற கணக்கில் பிஎஸ்ஜி குழுவிடம் மண்ணைக் கவ்வியது.

இதனால் இன்றைய ஆட்டத் தில் குறைந்தது மூன்று கோல் வித்தியாசத்தில் வென்றால் ஒழிய அக்குழு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியாது.
இந்த இக்கட்டான நிலைமை யில், ஆண்டர் ஹெரேரா, யுவான் மாட்டா, நெமான்யா மாட்டிச், அலெக்சிஸ் சான்செஸ், ஆன்டனி மார்சியால், அன்டோனியோ வெலன்சியா, மட்டயோ டார்மியன், ஜெஸி லிங்கார்ட் என பல முன்னணி ஆட்டக்காரர்கள் காய மடைந்திருப்பது அக்குழுவிற்குக் கவலையளிக்கும் விஷயம்.
அதோடு, நட்சத்திர மத்தியத் திடல் வீரர் பால் போக்பாவும் கடந்த ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால் நாளை அதிகாலை நடக்கவிருக்கும் பிஎஸ்ஜிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் தகுதியை இழந்து விட்டார்.

இடைக்கால நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் வந்த பிறகு யுனைடெட் வீரர்கள் எழுச்சியுடன் ஆடி வருகின்றனர். இந்த நிலை யில், கடந்த மாதம் நடந்த கால் இறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் நெய்மார், கவானி என இரு முக்கிய வீரர்கள் இல்லாத பிஎஸ்ஜி குழுவை எதிர் கொண்டதால் வெற்றி உறுதி என யுனைடெட் ரசிகர்கள் திடமாக நம்பினர்.

ஆனால், தான் உலகின் சிறந்த காற்பந்துக் குழுக்களில் ஒன்றாகத் திகழ்வதற்கான காரணத்தைத் திடலில் பிஎஸ்ஜி வெளிக்காட்டியது. உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்ற கிலியன் எம்பாப்பேயும் பிரெஸ்னல் கிம்பெம்பேயும் ஆளுக்கு ஒரு கோலை அடித்து வலுவான முன்னிலை பெற்றுத் தந்தனர்.
இது, ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் மிளிர தாங்கள் இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்பதை யுனைடெட் வீரர்களுக்கு உணர்த் தும்படியாகவும் அந்த ஆட்டம் அமைந்தது.

ஆயினும், தங்களது இறுதி வரை போராடும் குணத்தால் எத்தகைய பின்னடைவில் இருந் தும் தங்களால் மீள முடியும் என உறுதியாக நம்புகிறார் யுனைடெட் குழுவின் இங்கிலாந்து ஆட்டக்கார ரான ஆஷ்லி யங்.
"எங்களது திறமை என்னவென் பது எங்களுக்குத் தெரியும். இறுதி நொடி வரை விடாது போராடி ஆட்டத்தின் போக்கைத் திசைதிருப்ப எங்களால் முடியும்," என்றார் யங்.
இருப்பினும், இந்தப் பருவத்தில் பிஎஸ்ஜிக்காக 29 கோல்களைப் போட்டிருக்கும் எம்பாப்பே, முதல் ஆட்டத்தைப் போலவே 2வது ஆட்டத்திலும் யுனைடெட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால நிர்வாகியாக சோல்சியார் வந்த பிறகு யுனைடெட் குழு ஒரே ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளது. அந்த ஆட்டம் பிஎஸ்ஜிக்கு எதிரானது என்பது யுனைடெட் வீரர்களின் நம்பிக் கையைச் சிதைக்கக்கூடும்.
நாளை அதிகாலை நடக்க இருக்கும் மற்றோர் ஆட்டத்தில் போர்ட்டோ-ரோமா குழுக்கள் மோதுகின்றன. ரோமா 2-=1 என்ற முன்னிலையுடன் போர்ட்டோ வுக்குச் செல்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!