ரோகித் சர்மா: இதுதான் என் பணி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பந்தடிப் பாளர் ரோகித் சர்மா. இவர் துணை அணித் தலைவருமாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருக்கிறார். இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை வெற்றியாளர் பட்டம் வென்றுள்ளது.

விராத் கோஹ்லியைவிட ரோகித் சர்மா, டோனி ஆகியோர் அணித் தலைவராக இருந்தால் இந்திய அணிக்கு நல்லது என்று பேசப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் “துணை அணித் தலைவராக எனது பொறுப்பு விராத் கோஹ்லியின் அணித் தலைவர் பதவிக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு ஐயப்பாடு ஏற்பட்டாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ நான் உதவி புரிவேன்,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon