சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திற்கு புதிய தொழில்நுட்ப இயக்குநர்

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திற்கு புதிய தொழில்நுட்ப இயக்குநர்

1 mins read

சிங்கப்பூர் காற்பந்தாட்ட மேம்பாட்டை அனைத்து வகையிலும் நுணுக்கமாகக் கண்­காணித்து மேம்படுத்த புதிய தொழில்நுட்ப இயக்குநரை நியமித்துள்ளதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் புதிய தொழில்நுட்ப இயக்குநராகப் பதவியேற்றுள்ள திரு ஜோசப் பாலட்சைட்ஸ், 53 வயது, தேசிய அளவிலான குழுக்கள், அடித்­தள அமைப்புகளின் குழுக்கள், பெண்கள் காற்பந்து ஆகியவற்றில் கவனம் செலுத்துவார். சிங்கப்பூர் காற்பந்துக் குழுக்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, இளையர் மேம்பாடு போன்ற துறைகளை வலுப்படுத்துவதற்­கான முயற்சிகளில் அவர் ஈடுபடுவார்.

அத்துடன் கல்வி நிலை­யங்கள் உள்ளிட்ட மற்ற காற்­பந்துக் குழுக்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவறுக்கான தற்போதுள்ள விதிமுறைகள், மேம்பாட்டுத் திட்­டங்கள் ஆகியவற்றுக்கான அடிப்படைக் கோட்பாடுகளையும் நடை­­முறைத் திட்டங்களையும் ஆய்வுசெய்து தேவைக்கேற்ப மாற்­றங்கள் செய்யவும் அவர் உதவுவார் என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் தெரிவித்தது.