கொம்பனி அடித்த அற்புத கோலால் கரை சேர்ந்த சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) நேற்று அதி காலை நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வென்றது.

இந்த முக்கிய வெற்றியின் மூலம் 95 புள்ளிகளுடன் பட்டி யலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது மேன்சிட்டி. இப்பருவம் முடிவடைய இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இபிஎல் கிண்ணத்தை ஏந்தும் வாய்ப்பை அக்குழு பெரும் பாலும் நழுவவிடாது என்றே தெரிகிறது. மேன்சிட்டியைவிட ஒரு புள்ளி குறைவாக பெற்று பட்டியலில் இரண்டாவது நிலையில் உள்ளது லிவர்பூல்.

எட்டிஹாட் அரங்கில் நடை பெற்ற நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் லெஸ்டர் சிட்டிக்கு எதிராக கோல் எதையும் போட முடியாமல் மேன்சிட்டி ஆட்டக்கா ரர்கள் திக்குமுக்காடினர்.

ஆட்டம் முடிவடைய 20 நிமிடங்கள் மட்டுமே இருந்த வேளையில், கிட்டத்தட்ட 25 மீட்டர் தொலைவிலிருந்து மேன் சிட்டி குழுத் தலைவர் வின்சென்ட் கொம்பனி அற்புதமாக உதைத்த பந்து எதிரணியின் வலையைச் சீண்டியது. பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து தற்காப்பு ஆட்டக் காரரான கொம்பனி மேன்சிட்டிக் காக இப்பருவத்தில் அடித்த முதல் கோல் இது எனக் கூறப்படுகிறது.

“இந்தப் பருவத்தில் இதுவரை நான் கோல் அடித்ததில்லை என்றாலும் முக்கியமான தருணங் களில் எதையாவது செய்ய முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குள் தோன்றியது. அந்த நம்பிக்கை இன்றைக்கு நிறை வேறியது,” என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்தியாளரிடம் பூரிப்புடன் கூறினார் கொம்பனி.

பொதுவாக பயிற்சியின்போது மட்டுமே இதுபோன்று தொலை விலிருந்து கோல்கள் போட்டதாக சொன்ன அவர், இவ்வளவு தூரம் கடந்து வந்து மயிரிழையில் கிண்ணத்தை நழுவவிடக்கூடாது என்ற ஒரே எண்ணமே தாம் இந்த கோலைப் போட காரணமாக விளங்கியதாகக் கூறினார்.

கொம்பனியின் இந்த கோல் குறித்து கருத்துரைத்த மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, ஆட்டத்தை வெல்லவேண்டிய தருணத்தில் தற்காப்பு ஆட்டக்காரர் ஒருவர் கைகொடுப்பார் என்று தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

“தளராத நம்பிக்கை உடைய அனுபவ வீரர் கொம்பனி. இந்த ஆட்டத்தில் அவர் கோல் அடித்த தைவிட தம்மால் எப்படியாவது கோல் அடிக்க முடியும் என்று நம்பியதே முக்கியம்,” என்றார் கார்டியோலா.

விதியை நிர்ணயிக்கும் 

கடைசி ஆட்டம்

இப்பருவத்தின் கடைசி ஆட்டத்தில் பிரைட்டன் குழுவை மேன்சிட்டி எதிர்கொள்கிறது. ஞாயிற்றுக்கிழமை உல்வ்ஸ் குழுவுடன் லிவர்பூல் பொருதுகிறது. உல்வ்ஸ் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் காணும் முடிவுக்கு சமமாகவோ அல்லது அதைவிட சிறப்பாகவோ செயல் பட்டால் இம்முறை கிண்ணம் மேன்சிட்டியின் கைவசமாகிவிடும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon