டைகர் உட்ஸுக்கு உயரிய கௌரவத்தை வழங்கிய டிரம்ப்

டைகர் உட்ஸுக்கு உயரிய கௌரவத்தை வழங்கிய டிரம்ப்

1 mins read
e7e4ad3c-fd5e-4672-96eb-046f509e4fa9
டைகர் உட்ஸுக்கு அதிபரின் சுதந்திரப் பதக்கத்தை அணிவிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ் -

வா‌ஷிங்டன்: கோல்ஃப் விளை யாட்டில் சகாப்தமாக திகழும் டைகர் உட்ஸுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அதி பரின் சுதந்திரப் பதக்கத்தை நேற்று முன்தினம் வெள்ளை மாளி கையில் வழங்கிக் கௌரவித்தார்.

விளையாட்டுத் துறையின் வர லாற்றிலேயே மிகச் சிறந்த வீரர் டைகர் உட்ஸ் என்று அவருக்குப் புகழாரம் சூட்டினார் திரு டிரம்ப்.

"உண்மையான சகாப்தத்துடன் நாம் உள்ளோம். அமெரிக்க உன்னதத்தின் உலகளாவிய சின்னமாக டைகர் உட்ஸ் திகழ் கிறார்," என்றார் திரு டிரம்ப்.

இவ்வாண்டிற்கான மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டியை உட்ஸ் வென்றிருந்தார். பத்து ஆண்டு களுக்கும் மேலாக அவர் வென்ற பெரிய அளவிலான முதல் பட்டம் அது. காயங்கள், திருமண உறவில் சிக்கல் உள்ளிட்ட பல கார ணங்களால் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு கோல்ஃப் விளையாட்டைவிட்டு தள்ளியிருந்தார் அவர்.