ஸ்கூலிங் மீண்டும் தங்கம் வெல்வார்: ஃபெல்ப்ஸ் கணிப்பு

தோக்கியோவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி பிரிவில் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமெரிக்க நீச்சல் சகாப்தமான மைக்கல் ஃபெல்ப்ஸ் (படம்) தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், இளம் அமெரிக்க நீச்சல் வீரரான கேலப் டிரெஸ்ஸல், ஸ்கூலிங்கிற்கு மிகப் பெரிய சவாலாக விளங்கு வார் என்று ஃபெல்ப்ஸ் கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த உலக வெற்றியாளர் போட்டிகளில் 100 மீ. வண்ணத் துப்பூச்சி பாணி நீச்சலில் 49.86 வினாடிகளில் முதலாவதாக வந்தார் டிரெஸ்ஸல். பந்தய தூரத்தை நீந்திக் கடக்க 50.83 வினாடிகளை எடுத்துக்கொண்ட ஸ்கூலிங் மூன்றாமிடத்தையே பிடிக்க முடிந்தது. அந்தப் போட்டி களில் டிரெஸ்ஸல் ஏழு தங்கப் பதக்கங்களை அள்ளியிருந்தார்.

“டிரெஸ்ஸல் பல பந்தயங் களில் போட்டியிடுவார். மாறாக, 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் அதிக கவனம் செலுத் தும் ஸ்கூலிங் தங்கப் பதக்கத் தைத் தக்கவைத்துக்கொள்வார் என நினைக்கிறேன்,” என்றார் ஃபெல்ப்ஸ்.

2016 ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் ஸ்கூலிங், ஃபெல்ப்சை முந்திச் சென்று சிங்கப்பூருக்கு முதல் தங்கத்தை வென்று தந்தார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி