சச்சின்: கிண்ணத்தை வெல்ல கோஹ்லி மட்டும் போதாது

புதுடெல்லி: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. 

ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா ஜூன் 5ஆம் தேதியன்று அதன் முதல் ஆட்டத்தில் தென் னாப்பிரிக்காவை எதிர்கொள் கிறது. உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந் துக்குப் புறப்பட்டு சென்றது. 

தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, அணித் தலைவர் விராத் கோஹ்லி  தலைமையிலான இந்திய வீரர்கள் புறப்பட்டனர்.

இந்நிலையில், அணித் தலைவர் விராத் கோஹ்லியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக் கிண்ணத்தைவென்றுவிட முடி யாது எனக் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம்  சச்சின் டெண்டுல்கர் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

“உலகக் கிண்ணத்தின் ஒவ்வோர் ஆட்டத்திலும் அணி யில் உள்ள மற்ற வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும். தனி ஒருவராகப் போராடினால் மட்டும் கிண்ணத்தை வென்றுவிட முடியாது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுபவர்கள். அவர்கள் அணியில் எந்த இடத்தில் இறங்கினாலும் கவலையில்லை. போட்டியின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி வீரர்களைக் களமிறக்குவது முக்கியமானது.

“தற்போதைய சூழ்நிலையில் உலகக் கிண்ணத்தை வெல்வ தற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம் இருக்கிறது,”  என்று சச்சின் தெரிவித்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு மற்ற இந்திய வீரர்கள் நல்ல ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் சகாப்தம் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி