நியூசிலாந்திடம் வீழ்ந்த இலங்கை

கார்டிஃப்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இன் னோர் லீக் ஆட்டத்தில் நியூசிலாந் திடம் மண்ணைக் கவ்வியது இலங்கை அணி.

மேட் ஹென்றி, லாக்கி ஃபெர் குசன் ஆகியோரது பந்துவீச்சில் தடுமாறிய இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து ஆடிய நியூசி லாந்து அணி, 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.

52 ஓட்டம் எடுத்த இலங்கை அணித் தலைவர் கருணரத்னே தொடக்க ஆட்டக்காரராக இறங்கி இறுதிவரை ஆட்டமிழக் காமல் இருந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ரிட்லி ஜேகப்ஸ் என்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் 1999 உலகக் கிண்ணத் தொடரில் இதே சாதனையைச் செய்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon