முடிவு தெரியும் முன்பே லிவர்பூலுக்குப் பயணம் செய்த ரசிகர்கள்

தாம் கடந்த 25 ஆண்டுகளாக ஆதரித்து வரும் லிவர்பூல் குழு வெற்றிக் கிண்ணத்தை ஏந்தி அதன் சொந்த இடத்தில் பவனி வருவதை நேரடியாகக் காண விரும்பினார் 32 வயது நிதி திட்ட நிர்வாகி ஜோ‌ஷுவா ஆனந்த். உடனே இங்கிலாந்தின் லிவர் பூலுக்குச் செல்ல விமான டிக் கெட்டுகளையும் வாங்கிவிட்டார்.

ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் லிவர்பூல் குழுவும் டோட்டன்ஹேம் ஹாட்ஸ்பர் குழுவும் பொருதிய சாம்பியன்ஸ் கிண்ண இறுதி ஆட்டம் நடைபெறுவதற்கு முன்னரே இவர் இந்த டிக்கெட்டுகளை வாங்கி விட்டார்.

லிவர்பூல் கண்டிப்பாக கிண் ணத்தை வென்றுவிடும் என்ற நம்பிக்கை ஒரு புறம், அப்படியே வெல்லவில்லை என்றாலும் குறைந்த பட்சம் லிவர்பூல் குழு வின் சொந்த அரங்கிற்காவது சுற்றுலா செய்து வரலாம் என்ற எண்ணம் ஒரு புறம்.

அவர் மட்டுமின்றி அவருடன் சக லிவர்பூல் ஆதரவாளர்களான அவருடைய உறவினரும் நண் பரும் உடன் சென்றனர்.

கடந்த சனிக்கிழமை ஸ்பெயி னின் மட்ரிட் அரங்கில் சாம் பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் நடைபெற்றது. அந்த ஆட்டத்திற்கு பல நாட்கள் முன்னதாகவே அதா வது கடந்த திங்கட்கிழமையே லிவர்பூல் நகருக்குச் சென்று விட்டார் ஜோ‌ஷுவா. அங்கு லிவர்பூல் குழுவின் ஆன்ஃபீல்ட் அரங்கில் சுற்றுலா மேற்கொண் டதை மறக்க முடியாத அனுபவம் என்று கூறினார் ஜோ‌ஷுவா.

அவரது நண்பர் திரு விக்னேஷ், 31, கடந்த புதன்கிழமை அங்குச் சென்றடைந்தார். அவர் சொந்த தொழில் செய்து வருகி றார். விமானப் பொறியாளராகப் பணிபுரியும் ஜோ‌ஷுவாவின் உறவி னர் திரு குஹன், 32, கடந்த சனிக்கிழமை லிவர்பூல் சென்றார்.

சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட் டத்தை லிவர்பூல் நகரில் அங்குள்ள சக ரசிகர்களுடன் பார்த்த ஜோ‌ஷுவாவுக்கும் அவர் களது நண்பர்களுக்கும் கனவு நனவானது. லிவர்பூல் ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தையும் கைப்பற்றியது.

அந்த கிண்ணத்துடன் நேற்று லிவர்பூல் வீதிகளில் அக்குழு சிறப்பு பேருந்து ஒன்றில் உலா வந்தது.

“எதை நினைத்து லிவர்பூல் வந்தோமோ, அது நிறைவேறியது!” என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு ஜோ‌ஷுவா. லிவர்பூல் குழு வின் கொண்டாட்டங்களைத் தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவேற்றியிருந்தார்.

“நாங்கள் இந்த நிகழ்வுக்காக 1,000 மைல்கள் கடந்து வந்ததைக் கேட்ட லிவர்பூலைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் எங்களைப் பாராட்டினார். அங்கு உள்ள ரசிகர்களைவிட நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல, இதுதான் லிவர்பூல் குடும் பம்,” என்று அந்த ரசிகர் ஜோ‌ஷுவாவிடம் கூறியுள்ளார்.

ஒரு லிவர்பூல் ரசிகருக்கும் இதைவிட சிறந்த அங்கீகாரம் கிடைக்காது என்ற களிப்புடன் கூறினார் ஜோ‌ஷுவா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!