நடப்பு வெற்றியாளருக்கு முதல் சோதனை

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் புதிய பருவம் தொடங்கி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனாலும் அதற்குள்ளாகவே எந்தக் குழு லீக் பட்டியலில் முதலிடத்தை இறுதி வரை தக்கவைத்து மகுடம் சூடும் என்ற விவாதம் தொடங்கிவிட்டது.

கடந்த பருவத்தில் மகுடத்திற்காக லிவர்பூல் குழுவும் மான்செஸ்டர் சிட்டி குழுவும் இறுதி நாள் வரை போராடின. ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி பட்டத்தைக் கைப்பற்றியது.

இம்முறையும் அதேபோன்றதொரு நெருக்கடியான நிலை ஏற்படாமல் தவிர்க்க, மேன்சிட்டி இப்பருவத்தில் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். சிட்டியைக் கடந்த பருவத்தில் கடைசியாக வீழ்த்தியது ஸ்பர்ஸ் குழுதான்.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் மேன்சிட்டியை வென்று அத்தொடரின் இறுதிச் சுற்று வரை சென்றது.

இந்நிலையில், சிங்கப்பூர் நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்குத் தனது சொந்த எட்டிஹாட் அரங்கில் நடக்கும் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கிறது மேன்சிட்டி.

இங்கிலிஷ் லீக் வெற்றியாளர்கள், லீக் கிண்ண வெற்றியாளர்கள், எஃப்ஏ கிண்ண வெற்றியாளர்கள் எனப் பல வெற்றிக் கிண்ணங்களைக் குவித்துள்ள மேன்சிட்டி, இதுவரை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதில்லை.

தனது கனவைக் கலைத்த ஸ்பர்ஸ் குழுவிடம் மீண்டும் ஒருமுறை மேன்சிட்டி தோற்றுப் போவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

அண்மையில் நடந்த சமூகக் கிண்ண ஆட்டத்தில் மேன்சிட்டி, லிவர்பூல் குழுவை வென்றது. அத்துடன், கடந்த வாரம் இறுதியில் நடந்த லீக் பருவத்தின் முதல் ஆட்டத்திலேயே மேன்சிட்டி 5-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் குழுவை அபாரமாகத் தோற்கடித்த விதம் மற்ற குழுக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல அமைந்தது.

இருந்தபோதும், ஸ்பர்ஸ் குழுவையும் எளிதாக எடைபோட முடியாது. கடந்த பருவ லீக்கை 4ஆம் இடத்தில் முடித்த ஸ்பர்ஸ், இம்முறை புதிய ஆட்டக்காரர்களுடன் குழுவை வலுப்படுத்தியுள்ளது.

அக்குழு தனது முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் லீக்கின் புதுவரவான ஆஸ்டன் வில்லா குழுவை வீழ்த்தியது.

இந்தப் பருவத்தில் லிவர்பூல், மேன்சிட்டி குழுக்களுடன், இபிஎல் பட்டத்தை வெல்ல ஸ்பர்ஸ் குழுவுக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது என்று காற்பந்து நிர்வாகிகள் பலரும் கணித்துள்ளனர்.

மேன்சிட்டியின் நட்சத்திர ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்டியின் தற்காப்பைத் தகர்த்தெறிய ஸ்பர்ஸ் குழுவின் முன்னணி ஆட்டக்காரர்கள் ஹேரி கேனும் லூக்கஸ் மோராவும் ஆயத்தமாக இருக்கின்றனர்.

இந்த ஆட்டத்திலும் சிட்டியின் வெற்றிப் பயணம் தொடர்ந்தால், மகுடத்திற்காகப் போட்டியிடும் மற்ற குழுக்கள் புள்ளிகளை இழக்காமல் வெற்றிகளைக் குவிக்க வேண்டும். இல்லையெனில், பருவம் முடியும் வரை சிட்டியை விரட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இம்முறை காற்று எப்பக்கம் வீசும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!