மட்ரிட்டுக்காக 104 கோல்களைப் புகுத்திய கேரத் பெல்

மட்ரிட்: ஸ்பானிய லா லீகா காற்பந்துத் தொடரில் ஞாயிற்றுக்கிழமை வில்லாரியால் அணிக்கு எதிராகக் களமிறங்கியபோது ரியால் மட்ரிட்டின் முன்கள வீரர்கள் பலர் காயமுற்று இருந்தனர்,

போட்டி தொடங்கிய 11ஆவது நிமிடத்தில் அணித்தலைவர் செர்ஜியோ ராமோஸ் தமக்குக் கிடைத்த பந்தை எதிர்பாராதவிதமாகத் தவறவிட்டபோது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட வில்லாரியால் ஆட்டக்காரர் ஜெரர்ட் மொரெனோ அணியின் முதல் கோலைப் புகுத்தினார்.

இருந்தபோதிலும் முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் டானி கர்வஜா நெருக்கமான தூரத்தில் இருந்து பரிமாற்றிய பந்தை கேரத் பெல் கோலாக்கினார்.

ஆளுக்கு ஒரு கோல் என்ற நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் கடும் இழுபறியோடு நீடித்தது. கரிம் பென்செமா புகுத்திய கோல் ‘ஆஃப்சைட்’ என நிராகரிக்கப்பட்டது.

74ஆவது நிமிடத்தில் மோய் கோமெஸ் புகுத்திய கோலால் வில்லாரியல் மீண்டும் முன்னிலை பெற்றது.

ஆட்டம் இறுதி நேரத்தை நெருங்கியபோது கேரத் பெல் அசுர வேகத்தில் தாழ்வாகப் பந்தை செலுத்தி கோல் போட்டார். அதன்மூலம் 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் ஆட்டம் சமநிலையை எட்டியது.

போட்டி முடியும் நேரத்தில் கேரத் பெல் செய்த தவறுகள் அவருக்கு இரு நிமிடங்களில் இரு மஞ்சள் அட்டைகளைப் பெற்றுத் தந்தன. இந்த ஆட்டத்தில் போட்ட இரு கோல்களையும் சேர்த்து ரியால் மட்ரிட்டுக்காக அவர் 104 கோல்களைப் புகுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!