கார்டியோலா: சிட்டியால் போட்டி போட முடியாது

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவால் ஐரோப்பாவின் சிறந்த குழுக்களோடு போட்டியிட முடியாது என்றும் அந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதன் நிர்வாகி பெப் கார்டியோலா கூறுகிறார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியொன்றில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது சிட்டி.

“கடந்த பருவத்தில் லீக் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்ட சிட்டி குழு, நடப்பு பருவத்தில் நான்கு ஆட்டங் களை இழந்துள்ளது.

சிறந்த குழுக்களோடு போட்டியிடுவது சிட்டிக்குக் கடினமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்,” என்று கார்டி யோலா சொன்னார்.

லிவர்பூல், யுனைடெட், பார்சிலோனா, ரியால் மட்ரிட், யுவென்டஸ் போன்ற குழுக் களோடு போட்டியிடுவது சிட்டிக்கு சவாலான ஒன்று என்பதுதான் உண்மை என்றும் அவர் சொன்னார்.