லிவர்பூல்: முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை நோக்கி படையெடுக்கிறது லிவர்பூல் காற்பந்துக்குழு.
நடப்புப்பருவத்தில் 19 ஆட்டங்களில் °வளையாடி பாதி தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துவி;ல் முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்டுள்ளது.
இப்பருவத்தில் இதுவரை லீக்கில் எந்தக்குழுவாலும் லிவர்பூலை வெல்ல முடியவில்லை.
இந்த நிலையில், லீக் பட்டியலில் எட்டாவது நிலையில் உள்ள ஷெஃபீல்ட் யூனைடெட் குழு, நாளை அதிகாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டம் ஒன்றில் ஆன்ஃபீல்ட்டில் லிவர்பூலுடன் பொருதுகிறது.
லீக்கில் பீடு நடைபோடும் லிவர்பூலுக்கு ஷெஃபீல்ட் சவால் கொடுக்கும் என்றாலும், சொந்த மண்ணில் விளையாடும் லிவர்பூல் ஆட்டத்தில் சமநிலை காணுவதையோ தோல்வி அடைதையோ நினைத்துபூ பார்க்க முடியவில்லை என்பது விமர்சகர்களின் கருத்து.
நடப்புப் பருவத்தில் கடந்த செப்டம்பரில் இவ்விரு குழுக்களும் மோதிய ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்தது. அந்த ஆட்டத்தின் ஷெல்ஃபீல்ட் கோல்காப்பாளரின் தவற்றால் லிவர்பூலுக்கு அந்த கோல் கிடைத்தது.
தோல்விக்குப் பழிதீர்க்கும் முனைப்பில் ஷெஃபீல்ட் இருந்தாலும், பண்டிகை காலத்தில் முன்னணிக் குழுக்களுக்கு எதிரான ஆட்டங்கள் அடுத்தடுத்து வரிசைப்படுத்தப்பட்டிருப்பது அதற்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியிடம் 2-0 எனும் கோல் கணக்கில் ஷெஃபீல்ட் மண்ணைக் கவ்வியது நினைவுகூரத்தக்கது.
எனினும், இப்பருவத்தில் மீள் திறனுடன் செயல்பட்டு வரும் ஷெஃபீல்ட், ஓர் ஆட்டத்தில் தோல்வி அடையும்போதெல்லாம் அடுத்த ஆட்டத்தில் சமநிலை அல்லது வெற்றி அடைவது வழக்கம்.
இப்பருவத்தில் அக்குழு தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோற்கும் ஆட்டங்களில் அதிக கோல்களை ஷெஃபீல்ட் விட்டுக் கொடுப்பதில்லை. வெற்றிமேல் வெற்றி குவித்துவரும் லிவர்பூல் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் தோல்வியில் இருந்து மீண்டு வரும் ஷெஃபீல்ட். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.