லண்டன்: டெஸ் கிரிக்கெட் போட்டிகளைத் தற்போதுள்ள ஐந்து நாட்களில் இருந்து நான்கு நாட்களாகக் குறைத்து, டெஸ் போட்டிகளுக்கான செலவைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரித்துள்ளது.
"நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள்தான் நிலையான தீர்வை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். போட்டிக்கான திட்டமிடுதலை மேம்படுத்தவும் வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் இந்த முடிவு உதவும்," என்று வாரியம் கருத்துரைத்தது.
2023ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் சாம்பின்ஷிப் போட்டிகளை நான்கு நாட்கள் நடத்துவது ஐசிசி பரிசீலித்து வருகிறது.