‘கோஹ்லியை வீழ்த்தினால் போதும்’

கிறைஸ்ட்சர்ச்: போல்ட், சௌத்தி, ஜேமிசன், வேக்னர், கிராண்ட்ஹோம் என ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் வலுவாக இருக்கும் நியூசிலாந்து, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பந்தடிப்பு வரிசையைப் பதம்பார்க்கக் காத்திருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னரே இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு எதிராக வியூகம் வகுத்துள்ளதாகவும் அவரது விக்கெட்டைக் கைப்பற்றுவேன் எனவும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறியிருந்தார்.

அதன்படியே கோஹ்லியை இரண்டாவது இன்னிங்சில் வீழ்த்தினார் போல்ட். தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய கெயில் ஜேமிசன் முதல் இன்னிங்சில் கோஹ்லியின் விக்கெட்டை எடுத்தார்.

முதல் இன்னிங்சில் 2, இரண்டாவது இன்னிங்சில் 19 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார் இந்திய அணித் தலைவர் கோஹ்லி.

ஜேமிசன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்த, இரண்டாவது இன்னிங்சில் டிம் சௌத்தி 5 விக்கெட்டும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய வீரர்களின் மோசமான பந்துவீச்சால் 4வது நாளிலேயே மண்ணைக் கவ்வியது இந்தியா.

நியூசிலாந்து அணியில் மூவர் கூட்டணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு மேலும் ஒரு தலைவலியாக இடக்கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் அணிக்குத் திரும்பியுள்ளார்.

அவரது மனைவியின் பேறுகாலத்தை முன்னிட்டு விடுப்பில் சென்ற வேக்னர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாகத்தான் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஜேமிசனின் சிறப்பான பந்துவீச்சால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் கட்டாயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போல்ட், டிம் சௌத்தி ஆகிய இருவரும் அணியில் இருப்பார்கள் என்பதால் நீல் வேக்னரை யாருக்குப் பதிலாக அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் நியூசிலாந்து தேர்வுக்குழுவிடம் இருக்கும்.

எனவே சுழற்பந்துவீச்சாளர் அஜாஜ் படேலை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக நீல் வேக்னர் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நீல் வேக்னர் கோஹ்லி பற்றி கூறும்போது, “எந்த அணிக்கு எதிராக நான் ஆடினாலும் அதன் முக்கியமான வீரர்களைக் குறிவைப்பேன். ஓர் அணியின் சிறந்த வீரர்களை வீழ்த்திவிட்டால் அந்த அணியே பலவீனமடைந்து விடும்.

“கோஹ்லியை ஓட்டமெடுக்க விடாமல் செய்துவிட்டால் போதும்.இருமுனைகளிலிருந்தும் அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும்,” என்றார்.

6 டெஸ்ட் இன்னிங்சில் இதுவரை கோஹ்லியை 3 முறை வீழ்த்தியுள்ளார் வேக்னர். கோஹ்லிக்கு இவர் 108 பந்துகளை வீசி 60 ஓட்டங்களை மட்டுமே கொடுத்துள்ளதாக கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!