லாம்பார்ட்: செல்சி தேர்ச்சி பெற வேண்டும்

லண்டன்: சொந்த மண்ணில் ஒரு கோல்கூட போடாமல், பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழுவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, செல்சியின் சாம்பியன்ஸ் லீக் கனவு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

நேற்று அதிகாலை நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மன் குழுவான பயர்ன் மியூனிக்கிடம் 3-0 என மோசமாக தோற்றது செல்சி.

நிர்வாகி லாம்பார்ட்டின் கீழ் சொந்த மண்ணில் தொடர்ந்து தடுமாறி வரும் செல்சி கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

மியூனிக் வீரர்களும் முற்பாதி ஆட்டத்தில் பல கோல் முயற்சிகளை வீணாக்கினாலும், பிற்பாதி நேரத்தில் கோல்களைப் போட்டு தள்ளினர். மூன்று நிமிட இடைவெளியில் மியூனிக் குழுவின் நேப்ரி, இரண்டு கோல்கள் போட்டு செல்சியை திக்குமுக்காட செய்தார்.

குழு நிலை ஆட்டங்களின் போது ஸ்பர்ஸ் குழுவை 2-7 என மியூனிக் வென்றது. அதில் நான்கு கோல்களைப் போட்டது நேப்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

நேப்ரியின் இரட்டை கோலை செல்சி சமன் செய்யக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதை 76வது நிமிடத்தில் தவிடுபொடியாக்கியது லெவேன்டோஸ்கியின் கோல். போதாக்குறைக்கு தப்பாட்டம் காரணமாக 83வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் செல்சியின் அலன்ஸோ.

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய செல்சி நிர்வாகி லாம்பார்ட், “நாங்கள் மோசமாக விளையாடினோம். எதிரணியினர் எங்களைவிட சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் பந்துகளைக் கையாண்ட விதம் அருமையாக இருந்தது. நாங்கள் பந்துகளைக் கையாள்வதில் தேர்ச்சி பெற வேண்டும்.

“இதை கவனத்தில்கொண்டு, நாங்கள் எந்த நிலைக்குத் திரும்ப வேண்டுமோ, அதற்காக முயற்சி செய்ய வேண்டும். விரைவில் மீண்டெழுவதற்கு தேவையானவற்றைச் செய்ய வேண்டும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!