தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

கிறைஸ்ட்சர்ச்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது நாளான நேற்று முன்தினம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஹனுமா விகாரியும் ரிஷப் பன்டும் களத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து, நேற்றைய ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, கூடுதலாக 34 ஓட்டங்களை மட்டும் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் மளமளவென இழந்தது.

இந்திய அணி தரப்பில் பிருத்வி ஷா, செதேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேறினர். நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் டிம் சவூதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 132 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 46 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பின்னர் தெடர்ந்து ஆடிய அந்த அணி, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எளிதில் எட்டியது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

கோஹ்லி கருத்து

தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கோஹ்லி, இந்திய அணியின் பந்தடிப்பில் மீண்டும் ஏற்பட்ட பின்னடைவே டெஸ்ட் தொடரை இழக்க காரணமாகிவிட்டதாக புலம்பினார்.

“திட்டமிட்டபடி சரியாக செயல்படாததே தோல்விக்கு காரணம். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் பந்தடிப்பாளர்களைத் திணறடித்துவிட்டனர்.

“அந்நிய மண்ணில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்ய பந்தடிப்பில் ஜொலிப்பது அவசியம். அதனைச் செய்ய நாங்கள் தவறிவிட்டோம். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் விரும்பியபடி ஆட்டத்தை விளையாட முடியவில்லை,” என கோஹ்லி விளக்கம் அளித்தார்.

வில்லியம்சனுக்கு மகிழ்ச்சி

வெற்றி குறித்து கருத்துரைத்துள்ள நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன், “உலக நம்பர் ஒன் அணியான இந்தியாவை வெற்றி கொண்டதில் மிகவும் திருப்தி. உலகத்தரம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தியது எங்களுக்கு மிகச் சிறப்பான தருணம். ஒரு பெரிய முயற்சிக்குப் பின் கிடைத்த வெற்றி இது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!