காற்பந்துப் போட்டிகளின் நிறுத்தம் பலன் அளிக்கலாம்

லண்­டன்: உலக நாடு­களை கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்று புரட்டி எடுத்து வரு­கிறது. 

இதன் கார­ண­மாக காற்­பந்­துப் போட்­டி­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி­ வைக்­கப்­பட்­டுள்­ளன. இத­னால் பல காற்­பந்­துக் குழுக்­க­ளின் வரு­மா­னம் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் இந்­தக் கெடு­த­லி­லும் நன்மை ஏற்­படும் சாத்­தி­யம் இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

“இதற்கு முன் இத்­த­கைய சூழலை நம்­மில் யாரும் சந்­தித்­த­தில்லை. கொரோனா கிரு­மித்­தொற்று அனை­வ­ரின் வாழ்க்­கை­யை­யும் பெரு­ம­ள­வில் மாற்­றி­வி­டும்,” என்று எவர்ட்­டன் குழு­வின் நிர்­வாகி கார்லோ அன்­ச­லோட்டி தெரி­வித்­துள்­ளார். இரண்­டாம் உல­கப்போருக்­குப் பிறகு தற்­போ­து­தான் ஐரோப்­பா­வில் உள்ள அனைத்து நாடு­க­ளி­லும் காற்­பந்து ஆட்­டங்­கள் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த சில ஆண்­டு­க­ளாக அதிக அள­வில் பணம் பார்த்து வரும் காற்­பந்து உல­கம் தற்­போது வரு­மா­னம் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் செய்­வ­த­றி­யாது தவித்து வரு­கிறது.

ஆட்­டக்­கா­ரர்­கள், நிர்­வா­கி­கள், ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரின் சம்­ப­ளம் குறைக்­கப்­ப­டு­வது உறுதி என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“நேரடி ஒளி­ப­ரப்பு மூலம் கிடைக்­கும் பணம் தற்­போது கிடையாது. இத­னால் ஆட்­டக்­கா­ரர்­கள், நிர்­வா­கி­க­ள் ஆகியோரின் சம்­ப­ளம் குறை­யும். 

“மக்­க­ளின் வரு­மா­ன­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் காற்­பந்து ஆட்­டங்­களை விளை­யாட்­ட­ரங்­கத்­தில் காண தேவைப்­படும் நுழை­வுச்­

சீட்­டு­க­ளுக்­கான விலை­யும் குறை­யும். பொரு­ளி­ய­லில் மாற்­றம் ஏற்­படும். அதன் எதி­ரொ­லி­யாக காற்­பந்­தும் மாறக்­கூ­டும். இத­னால் காற்­பந்து உல­கம் மேம்­பட்டு நன்மை ஏற்­படும் வாய்ப்பு இருக்­கிறது,” என்­றார் அன்­ச­லோட்டி.

“நெருக்­க­டி­நி­லைக்­குப் பிறகு நல்ல காலம் பிறந்து வாய்ப்­பு­கள் குவி­வது வழக்­கம். ஆனால் நிலைமை மோச­ம­டை­யும் அபா­ய­மும் உள்­ளது. நிலைமை மேம்­பட காற்­பந்து உல­கில் அதி­கா­ரம் சம­மா­கப் பகிர்ந்­து­கொள்­ளப்­பட வேண்­டும்,” என்­றார் காற்­பந்து வர­லாற்று நிபு­ணர் டேவிட் கோல்­பி­ளேட்.

“அனைத்து நாடு­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் இன்­னும் இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­களில் தற்­போது செல­வி­டு­வது போல குழுக்­க­ளால் செல­விட முடி­யாது. இத­னால் புதிய காற்­பந்து உல­கம் பிறக்­கும்,” என்­றார் பயர்ன் மியூ­னிக் தலை­வர் உலி ஹோனஸ்.