சுடச் சுடச் செய்திகள்

அக்டோபரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே 50 விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த

6 மாதமாக இதன் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், வருகிற அக்டோபர் 15ஆம் தேதி முதல் மீண்டும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 8ஆம் தேதி ஹைதராபாத் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏற்கெனவே அங்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon