சுடச் சுடச் செய்திகள்

காற்பந்து கதாநாயகனுக்கு அஞ்சலி

காற்பந்து உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மறைந்த டியகோ மரடோனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அர்ஜெண்டினாவில் உள்ள வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற் பட்டதாக வழக்கறிஞர்கள் தெரி வித்தனர். அவருக்கு வயது 60.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் மரடோனா பாதிக்கப்பட்டிருந்தார். சில வாரங் களுக்கு முன்பு அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.

இந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த மரடோனா வுக்கு புதன்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் நாடே விரும்பும் மகனுக்கு அஞ்சலி செலுத்த ஏராள மானவர்கள் அவரது வீட்டு முன்பு கூடினர். அவர்களில் பலர் உலகக் கோப்பையை மரடோனா முத்த மிடும் படங்களை கையில் வைத்து இருந்தனர். இவ்­வே­ளை­யில் அர்­ஜெண்­டினா அர­சாங்­கம், மூன்று நாள் துக்­கம் அனுஷ்­டிக்­கப்படும் என அறி­வித்து உள்­ளது.

“நீங்­கள் எங்­களை உல­கின் உச்­சத்­துக்கே கொண்டு சென்று எங்­களை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்தி னீர்­கள். எங்­க­ளு­டன் நீங்­கள் இருந்­த­தற்­காக நன்றி தெரி­விக் கிறோம். நாங்­கள் எல்­லோ­ரும் உங்­களை இழந்­து தவிக்­கி­றோம்,” என்று அதி­பர் அல்­பெர்டோ ஃபெர்னாண்டஸ் டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அர்­ஜெண்­டினா மக்­கள் மரடோ னாவை ‘எல் டியாஸ்’ என்று அழைக்­கின்­ற­னர். இதற்கு கட­வுள் என்று பொருள்­படும். 1986ஆம் ஆண்டு மெக்­சி­கோ­வில் நடந்த உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் அர்­ஜெண்­டினா வெல்­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக இருந்த மர­டோனா அழி­யாப் புக­ழைப் பெற்­றார். இங்­கி­லாந்­துக்கு எதி­ரான அந்த ஆட்­டத்­தில் அவர் போட்ட 2வது கோல் நூற்­றாண்­டின் மிகச்­சி­றந்த கோல் என்று இன்­றும் வரு­ணிக்கப்படு­கிறது. தனி­யொரு ஆளாக மைதா­னத்­தில் தனது சொந்த பகு­தி­யி­லி­ருந்து கிட்­டத்­தட்ட அனைத்து இங்­கி­லாந்து ஆட்­டக்காரர்­க­ளை­யும் தாண்டி பந்தை லாவ­க­மாக தட்­டிச் சென்று வலைக்­குள் செலுத்­தி­னார். இதே ஆட்­டத்­தில் இவர் கையால் போட்ட முதல் கோல் சர்ச்­சை­யில் சிக்­கி­யது.

இது பற்றி பின்னர் ஒரு ேபட்டியில் பேசிய மாரடோனா, “அது ஆண்டவனின் கை,” என்று கூறியிருந்தார்.

ஆனால் போதைப் பொருள், மதுபானங்களுக்கு அடிமையானதால் மரடோனாவின் உடல்நிலை பிற் காலத்தில் மோசமடைந்தது.

இதற்கிடையே நேற்று மர டோனாவின் உடல் அதிபர் மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அங்கு ஆயிரக் கணக்கானவர்கள் வரிசையில் நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“தலைசிறந்த காற்பந்து வித்த கரை இழந்துள்ளோம். நீங்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது,” என்று போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகழாரம் சூட்டி உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon