கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விபத்து; சில அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வருகிறார்

கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் பயணம் செய்த கார் செங்குத்துப் பள்ளத்தில் உருண்ட விபத்தில், அவர் பலத்த காயமடைந்ததாகவும் லாஸ் ஏஞ்சலிசில் உள்ள மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவருக்கு பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருப்பதாக ஹார்பர் - யுசிஎல்ஏ மருத்துவ நிலையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அனிஷ் மஹாஜன் வெளியிட்ட செய்தி அறிக்கை, 45 வயதான திரு டைகர் உட்சின் டுவிட்டர் பக்கதில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அவரது வலது காலின் கீழ்ப் பகுதியிலும் கணுக்காலிலும் நெடுநேரம் அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது நன்கு உடல்நலம் தேறி வருவதாகவும் அறிக்கை தெரிவித்தது.

Remote video URL

உலோகப் பட்டைகள் வைத்து எலும்பு முறிவுகளுக்கும் காயங்களுக்கும் அறுவைசிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் மகாஜனின் அறிக்கை தெரிவித்தது.

அடிக்கடி விபத்து நடக்கக்கூடிய பகுதியில் இறக்கமான இடத்தில் நேற்று பிற்பகலில் திரு உட்ஸ் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவரது 2021 Genesis GV80 கார் விபத்துக்குள்ளானது.

அந்த கார் பெருத்த சேதத்துக்கு உள்ளானதை, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொளி காட்டியது.

அந்த வாகனம் வேகமாகச் சென்றிருக்கலாம் என ஷெரிஃப் அலெக்ஸ் வில்லானுவெவா என்பவர் குறிப்பிட்டார்.

காரின் முன்புறக் கண்ணாடியை உடைத்து, காருக்குள் சிக்கிக்கொண்ட திரு உட்சை தீயணைப்புத் துறை அதிகாரிகள் மீட்டதாகக் கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!