சிவகார்த்திகேயனுடன் இணையும் ஷிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி தமிழ் ரசி­கர்­களை கிட்­டத்­தட்ட 5 மாதங்­க­ளாக சிரிக்க வைத்­தது. இந்­நி­கழ்ச்­சி­யில் கோமா­ளி­யாக வந்து பல­ரின் மன­தைக் கவர்ந்த பாடகி ஷிவாங்கி தற்­பொ­ழுது சிவ­கார்த்­தி­கே­யன் நடிக்­கும் ‘டான்’ படத்­தில் நடித்து வரு­கி­றார்.

முதல் சீச­னை­விட இரண்­டா­வது சீச­னுக்கு மிகப்­பெ­ரிய வர­வேற்பு மக்­கள் மத்­தி­யில் கிடைத்­தது. இந்­நி­கழ்ச்சி குறித்து பல விஷ­யங்­களை மனம் திறந்து பேசினார் ஷிவாங்கி.

“சூப்­பர் சிங்­கர்’ நிகழ்ச்­சி­யில் பாட­கி­யாக கலந்­து­கொ­ண்டேன். அத­னைத் தொடர்ந்து ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்­சி­யில் கோமா­ளி­யாக கலந்துகொள்­ளும் வாய்ப்பு கிடைத்­தது. அதன் மூலம் பல குடும்­பங்­களில் அவர்­கள் வீட்­டுப் பெண்­ணா­கவே மாறி­விட்­டேன்.

“பாட­கி­யாக இருந்த எனக்­குள் இருந்த நகைச்­சு­வைத் திறனை இந்­நி­கழ்ச்சி ஒட்­டு­மொத்­த­மாக வெளிக்­கொண்டு வந்­தது. இது என்­னு­டைய வளர்ச்­சிக்கு மிகப்­

பெ­ரிய கார­ண­மாக மாறி­யுள்­ளது.

“இந்­நி­கழ்ச்­சிக்கு முன் சமை­யல் பற்றி எது­வுமே தெரி­யாது. தற்­பொ­ழுது சமை­யல்­ செய்யக் கற்று வரு­கி­றேன்.

“இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அஸ்வின். அவர் நிகழ்ச்­சி­யின்­போது சமை­ய­லைப் பற்றி மட்­டுமே நினை­வில் வைத்து இருப்­பார். அவரை முதன்­மு­த­லாக பார்த்­த­போது, ‘இப்­படி ஓர் அழ­கான பையன் சமைக்க வந்­தி­ருக்­கி­றாரே,’ என்­று­தான் நினைத்­தேன். அதன் பின்­னர் நான் அவ­ரு­டன் இணைந்து சமை­யல் செய்ய விருப்­பம் தெரி­வித்து அந்த வாய்ப்பு மற்ற கோமா­ளி­க­ளுக்­குப் போகும்­போது எனக்கு கோப­மாக வரும்.

“வாய்ப்­புக் கிடைக்­கா­த­போது என் சக போட்டியாளருக்கு உத­வா­மல் அஸ்­வி­னு­டன் கடலை போடப் போய்­வி­டு­வேன். எங்­க­ளு­டைய கூட்­டணி இந்த அள­வுக்கு வர­வேற்­பைப் பெறும் என்று யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. எனது வளர்ச்­சியைப் பார்த்து அஸ்­வி­னும் அவ­ரது வளர்ச்­சி­யைப் பார்த்து நானும் மகிழ்ச்சி அடை­கின்­றோம்.

“டான்’ படத்­தில் நடி­கர் சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது ஒரு கன­வா­கவே இருக்­கிறது.

“சின்­னத்­திரை படப்­பி­டிப்­பிற்­கும் பெரி­ய திரை படப்­பி­டிப்­பிற்கும் அதி­க­மான வித்­தி­யா­சங்­கள் இருப்­பதை முதல் நாளே புரிந்­து­கொண்­டேன். ரசி­கர்­களை மகிழ்­விக்­கும் வித­மாக நகைச்­சு­வைக் கதா­பாத்­தி­ரங்­களில் தொடர்ந்து நடிப்­பேன்.

“எங்­கள் கூட்­ட­ணி­யைத் தொடர்ந்து இந்­நி­கழ்ச்­சி­யில் மக்­க­ளின் மனங்­களைக் கவர்ந்த மற்­றொரு

கோமாளி என்­றால் அது புகழ்­தான். தொலைக்­காட்­சி­யி­லும் வீட்­டி­லும் என்­னைத் தனது சொந்த தங்­கை­யா­கவே புகழ் அண்­ணன் பார்த்­துக் கொள்­கி­றார்,” என்­றார்.

‘குக் வித் கோமாளி’ அரங்­கைப் பிரிய முடி­யா­மல் தவிப்­ப­தா­க­வும் மீண்­டும் அடுத்த சீசன் வந்­தால் தானா­கவே அந்த அரங்­கிற்­குள் நுழைந்­து­வி­டப் போவ­தா­க­வும் கூறி­னார் ஷிவாங்கி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!