தயாரிப்பாளராகும் நடிகை

பிர­பல பாலி­வுட் நடிகை கங்­கனா ரணா­வத், நடிப்­பில் மட்­டுமே கவ­னம் செலுத்தி வந்­த­வர் தற்­போது தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் மாறி இருக்­கி­றார்.

மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு உரு­வாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் ஜெய­

ல­லிதா கதா­பாத்­தி­ரத்­தில்

கங்­கனா ரணா­வத் நடித்­துள்­ளார். இவ­ரு­டன் அர­விந்த்­சாமி, மது­பாலா, சமுத்­தி­ரக்­கனி உள்­ளிட்ட பலர் முக்­கி­ய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

ஏப்­ரல் 23ஆம் தேதி திரை­

ய­ரங்­கு­களில் ‘தலைவி’ வெளி­யா­கும் எனப் படக்­கு­ழு­வி­னர் அறி­வித்­தி­ருந்­த­னர். ஆனால், கொரோனா பர­வ­லால் ‘தலைவி’ படத்­தின் வெளி­யீட்­டைத் தேதி குறிப்­பி­டா­மல் படக்­கு­ழு­வி­னர் ஒத்­தி­ வைத்­துள்­ள­னர்.

நடிப்­பில் மட்­டுமே கவ­னம் செலுத்தி வந்த கங்­கனா, தற்­போது தயா­ரிப்­பி­லும் இறங்­கி­யுள்­ளார். தனது ‘மணி­கர்­னிகா பிலிம்ஸ்’ சார்­பில் ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ என்ற படத்­தைத் தயா­ரிக்­க­வுள்­ளார். இப்­ப­டம் நேர­டி­யாக ‘ஓடிடி’யில் வெளி­யா­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘மணி­கர்­னிகா’ படத்தில் நடித்துக்கொண்டு இயக்­க­வும் செய்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!