‘40 வயதுவரை ரொனால்டோவால் ஆட முடியும்’

லண்­டன்: மான்­செஸ்­டர் யுனை­டெட் காற்­பந்­துக் குழு­விற்­குத் திரும்பி உள்ள போர்ச்­சு­கல் வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வால் 40 வயது­வரை விளை­யாட முடி­யும் என்று இங்­கி­லாந்து நட்­சத்­தி­ரம் வெய்ன் ரூனி தெரி­வித்து இருக்­கி­றார்.

சென்ற மாதம் இத்­தா­லி­யின் யுவென்­டஸ் குழு­வி­லி­ருந்து வெளி­யே­றிய 36 வய­தான ரொனால்டோ, யுனை­டெட் சார்­பில் மீண்­டும் ஈராண்­டு­கா­லம் விளை­யாட ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், “கோல­டிப்­ப­தில் கைதேர்ந்­த­வ­ரா­கத் திகழ்­கி­றார் ரொனால்டோ. அந்த அள­விற்கு அவர் தமது ஆட்­ட­மு­றையை மெரு­கேற்­றி­யுள்­ளார்,” என்று புகழாரம் சூட்டினார் ரூனி.

ரொனால்டோ தமது உடற்­ப­ரா­மரிப்­பி­லும் மிகுந்த கவ­னம் செலுத்­து­வ­தா­கக் குறிப்­பிட்ட ரூனி, அவ­ரது உடல்­நி­லை­யைப் பார்க்­கும்­போது, 40 வய­து­வரை அவர் விளை­யா­டி­னா­லும் அது வியப்­ப­ளிப்­ப­தாக இராது என்­றும் சொன்­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!